Watch Kadavul Amaithu Vaitha Medai Song with Tamil Lyrics from Aval Oru Thodarkkathai (1974) Movie
Song : Kadavul Amaithu Vaitha Medai
Movie : Aval Oru Thodarkkathai (1974)
Lyrics : Kannadasan
Sung By : S.P.Balasubramani
Music : M.S.Viswanathan
Watch Song :
Song Lyrics :
ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்.
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா...
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு (காடு சத்தம்)
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே
ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு
அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே...ஆருயிரே...என் அத்தான்
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா (கொட்டு முழக்க,நாதஸ்வரம் சத்தம்)
கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா
ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா (விமான சத்தம்)
தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா (யாழ் சத்தம்)
சிங்கார காலோடு சங்கீத தண்டைகள் சந்தோஷம் பாடுதம்மா (தண்டைகள் சத்தம்)
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா...
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா (கன்று சத்தம்)
கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா (முயல் சத்தம்)
பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா (மான்கள் சத்தம்)
பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா
பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாண்டு பாடுதம்மா (யானைகள் சத்தம்)
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
லல் லல் லா லாலா லாலா லாலா லா.......
ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா
உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா (குயில் சத்தம்)
அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா
அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான் இப்போது தெரிந்ததம்மா (தவளை சத்தம்)
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
No comments:
Post a Comment