Song Lyrics :
ஆ: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுதடி,
ஆ: என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி,
ஆ: உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி
என்னை மறந்து போவதும் ஞாயமோ
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்து விட்ட மாயமோ
ஒருமனம் உருகுது ஒரு மனம் விலகுது ..ஏய்....
ஆ: என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி....
ஆ: அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
கண்ணன் தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி
நாளும் மாறுகின்ற உன்மனம்
எனக்கின்று புரிந்தது எவனென்று தெரிந்தது… ஏய்…
ஆ: என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி......
ஆ: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி........
No comments:
Post a Comment